For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர்மழை எச்சரிக்கை! சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை!

09:43 AM May 20, 2024 IST | Web Editor
தொடர்மழை எச்சரிக்கை  சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். 

Advertisement

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது . இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்றுலா பகுதிகளுக்கு, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார்
4500 அடி உயரத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல
பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்
அறிவித்துள்ளது.  குறிப்பாக ஒவ்வொரு மாதங்களிலும் வரக்கூடிய பிரதோஷம், அமாவாசை,  சிவராத்திரி,  பௌர்ணமி உள்ளிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : அடுத்த 3 மணி நேரத்திற்கு… சென்னை உள்ளிட்ட 10மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில் தற்போது கனமழை எச்சரிக்கை காரணமாகவும்,  கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள வழுக்குப்பாறை,  சங்கிலி பாறை ஓடை,  நாவலூற்று,  மாங்கனி ஓடை, பிளாவடி கருப்பசாமி ஓடை பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வைகாசி மாத பிரதோசம் மற்றும் பௌர்ணமிக்காக 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்களுக்கு மலையேர அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  தற்போது வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தாணிப்பாறை அடிவாரத்திற்கு பிரதோஷத்தை முன்னிட்டு வந்த சில பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.

Tags :
Advertisement