Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிறந்த மாநில பல்கலைக்கழகங்கள்... அண்ணா பல்கலை. முதலிடம்!

06:04 PM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

2024 ஆம் ஆண்டுக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசையின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட்டு வருகிறது. இதற்காக என்.ஐ.ஆர்.எஃப். என்ற தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்கள், மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளாக தரவரிசைப்படுத்தி அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் 2024-ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில், ஒட்டுமொத்த அளவில் 6ஆவது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. அதுபோல, 2024 ஆம் ஆண்டுக்கான மாநில பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது.

Tags :
Anna universityChennaiNIRFranking
Advertisement
Next Article