For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விண்வெளியில் மிதக்கும் டூல் பேக் - பூமியிலிருந்து பார்க்க முடியுமா..?

04:46 PM Nov 14, 2023 IST | Web Editor
விண்வெளியில் மிதக்கும் டூல் பேக்   பூமியிலிருந்து பார்க்க முடியுமா
Advertisement

விண்வெளி வீரர்கள் தவறுதலாக தவறவிட்ட டூல் பேக் விண்வெளியில் மிதக்கிறது.  அதனை பூமியிலிருந்து பார்க்க முடியுமா என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

Advertisement

பல விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செண்டு சாகசங்களை புரிந்து வருகின்றனர். சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளி வீரரான சுல்தான் அல நயாடி விண்வெளிக்கு சென்று பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அங்கே தேனில் தடவிய ரொட்டித் துண்டுகளை உண்பது. விண்வெளியில் மிதப்பது, தண்ணீர் எப்படி மிதக்கிறது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

விண்வெளியில் ஏதேனும் பொருளைக் கீழே போட்டால் என்னவாகும்? என்று பலருக்கும் கேள்வி எழலாம் . கீழே விழும் பொருள் விண்வெளியில் மிதந்துகொண்டே இருக்கும். அதனால் விண்வெளி வீரர்கள் தங்களிடம் உள்ள பொருட்களை கவனமாக பயன்படுத்துவர்.

இந்த நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் (NASA) சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் தங்களது விண்வெளி நிலையத்தில்  வேலை செய்து கொண்டிருக்கும் போது டூல் பேக்கை தெரியாமல் கீழே போட்டுவிட்டனர். இந்த டூல் பேக் தற்போது விண்வெளியில் மிதந்துகொண்டே இருக்கிறது.

அமெரிக்க விண்வெளி வீரர்களான ஜாஸ்மின் மோக்பெலியும் (Jasmin Moghbeli) லோரல் ஓ ஹாராவும் (Loral O'Hara)  விண்வெளி நிலையத்தைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும்போது தங்களிடம் இருந்த டூல் பேக் கீழே தவறுதலாக விழுந்துள்ளது.  இருவரும் விண்வெளி நிலையத்திற்கு வெளியே சுமார் 7 மணிநேரத்திற்கு மேலாக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது கீழே விழுந்த அந்த டூல் பேக் விண்வெளியில் மிதக்கிறது.

கிழே விழுந்த பையை விண்வெளிக் குப்பையாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.  நட்சத்திரங்கள், கோள்களை விண்வெளியில் மிதப்பதை போன்று விண்வெளி வீரர்கள் தவறவிட்ட டூல் பேக்கும் இனி விண்வெளியில் மிதக்கும். அதைப் பூமியிலிருந்து தொலைநோக்கியைக் கொண்டு காணமுடியும் என்றும், வரும் மாதங்களில் அது பூமிக்குள் வரும் என்றும் அப்போது அது எரிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement