Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்சி - தாம்பரம் இடையே இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்!

05:02 PM May 26, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் வெளி ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் பயணிப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முற்றிலும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதையும் படியுங்கள் : “ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்பு” – உக்ரைன் அதிபர் தகவல்!

இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது,

திருச்சியில் இருந்து இன்றிரவு 11 மணியளவில் புறப்படும் மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை காலை 6.05 மணியளவில் தாம்பரம் வந்தடைகிறது. முன்பதிவில்லாத இந்த ரயில் இடையில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுக சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி தாம்பரம் இடையே இந்த மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 24ம் தேதி சென்னை எழும்பூர்-திருச்சி இடையே முன்பதிவில்லாத மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Chennaispecial trainTamilNaduTrainTrichy
Advertisement
Next Article