For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நாளை சம்பவம் உறுதி” 'GOAT' பட அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு!

02:55 PM Apr 13, 2024 IST | Web Editor
“நாளை சம்பவம் உறுதி”  goat  பட அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு
Advertisement

'GOAT' படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு “நாளை சம்பவம் உறுதி” எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisement

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த், வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.  நடிகர் விஜய்க்கு இது 68- வது படம் ஆகும்.  தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெங்கட்பிரபு முதன்முறையாக இணைந்துள்ளனர்.  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.

அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில்  படமாக்கப்பட்டு வருகிறது.  படத்தின் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு விரைவில் அங்கு முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் “நாளை சம்பவம் உறுதி ”என்று இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்

Tags :
Advertisement