For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைவு!

08:20 AM Jul 18, 2024 IST | Web Editor
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைவு
Advertisement

சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த 2 நாட்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.90 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 20 ரூபாய் குறைந்து கிலோ ரூ.70 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தைகள் உள்ளன. இங்கு, பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.  கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது.  வரத்து குறைவால் கடந்த 2 நாட்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.90 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 20 ரூபாய் குறைந்து கிலோ ரூ.70 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பான வியாபாரிகள் கூறியதாவது, "வரத்து போதிய அளவு இல்லை என்றாலும், வரத்துக்கு ஏற்ற விற்பனை இல்லாததால் விலை குறைந்துள்ளது.  ஆடி மாதம் என்பதால் சுப நிகழ்வுகள் எதுவும் இல்லாததால் விற்பனை மந்தமாகி உள்ளது.  கோயம்பேடு சந்தைக்கு நேற்று 25 லாரிகள் மட்டுமே வந்தன. இன்று 35 முதல் 40 வண்டிகள் வந்துள்ளன. நேற்றை விட இன்று தக்காளியின் விலை பெட்டிக்கு 500 ரூபாய் வரை குறைந்துள்ளது. அதனால் விலை குறைந்துள்ளது"  என்று தெரிவித்தனர்.

Tags :
Advertisement