For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்" - திமுக தேர்தல் அறிக்கை!

12:30 PM Mar 20, 2024 IST | Web Editor
 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்    திமுக தேர்தல் அறிக்கை
Advertisement

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முற்றிலுமாக அகற்றப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது.  வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.  இதனால் கூட்டணி,  தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள் : சிலிண்டர் ரூ.500…பெட்ரோல் ரூ.75… டீசல் ரூ.50… திமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை…

அந்த வகையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளிலும், விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேகவிற்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிப் 5-ம் தேதி முதல் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். இதையடுத்து, மக்களவைத் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :

"மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டப் பிரிவு 356 அகற்றப்படும்,  கேஸ் சிலிண்டர் ரூ.500,  பெட்ரோல் விலை ரூ. 75 வழங்கப்படும்,  உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்பட வேண்டும்,  புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்,  அனைத்து மாநில மொழிகள் வளர்ச்சிக்கு சம நிதி வழங்கப்படும், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்,  புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்,  தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்,  மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்வி கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்,  சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement