Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுகவில் விருப்பமனு சமர்பிக்க இன்று கடைசி நாள்!

09:33 AM Mar 06, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுவை சமர்பிக்க இன்று கடைசி நாள் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : நாட்டிலேயே முதல் முறையாக மாநில அரசுக்கு சொந்தமான OTT தளம் - கேரளாவில் அறிமுகம்!

அந்த வகையில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில்,  40 தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது.  அதன்படி பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகளும்,  தொண்டர்களும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை அளித்தனர்.

இதையடுத்து, பொது தொகுதியில் போட்டியிட ரூ. 20,000 மற்றும் தனித் தொகுதியில் போட்டியிட ரூ. 15,000 செலுத்தி தங்களுக்கான விருப்ப மனுக்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் அளித்து வந்தனர்.  இந்த நிலையில் விருப்பமனுக்களை தாக்கல் செய்வதற்கு இன்று இறுதி நாள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை இன்று மாலை 5 மணிக்குள்ளாக அதிமுக தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என அதிமுக தலைமை  கேட்டுக் கொண்டு உள்ளது.

Tags :
AIADMKEdappadiPalaniswamiElection2024ElectionPetitionParliamentaryElection
Advertisement
Next Article