நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தொடர் கனமழை எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : முதல் போட்டியிலேயே அரை சதமடித்த தமிழக வீரர் | அசத்திய சாய் சுதர்ஷன்…!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், இன்று காலை 08.30 மணி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.