TODAY GOLD RATE : ஒரே நாளில் இருமுறை உயர்வு - ரூ.89,000-ஐ தொட்ட தங்கம் விலை..!
தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. சென்னையில் கடந்த திங்கள்கிழமை செப்.29-இல் சவரன் ரூ.1,040 உயர்ந்து ரூ.86,160-க்கும், செப்.30-இல் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,880-க்கும், அக்.1-இல் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கும், அக்.2-இல் விலை மாற்றமின்றி ரூ.87,600-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து அக்.3-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.87,200-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.520 உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராம் ரூ.11,125க்கு விற்பனையாகிறது.
இன்று காலை ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,00க்கு விற்பனையாகிறது.