For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாலை விபத்துக்களை தடுக்க, தெரு நாய்களுக்கு ஒளிரும் பட்டை அணிவிக்கும் தன்னார்வலர்கள் | குவியும் பாராட்டு!...

07:16 PM Dec 13, 2023 IST | Web Editor
சாலை விபத்துக்களை தடுக்க  தெரு நாய்களுக்கு ஒளிரும் பட்டை அணிவிக்கும் தன்னார்வலர்கள்   குவியும் பாராட்டு
Advertisement

சாலை விபத்துக்களை தடுக்க, தெரு நாய்களுக்கு ஒளிரும் பட்டை தன்னார்வலர்கள் அணிவித்து வருகின்றனர்.

Advertisement

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன். அவர் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து, காமராஜர் அறக்கட்டளை என்ற சமூக செயற்பாட்டு அமைப்பினை கட்டமைத்து, கொரானா காலகட்டத்திலிருந்து பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களின் நண்பர் ஒருவர், இரவு நேரத்தில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தெருநாய் சாலை குறுக்கே ஓடி வந்ததால், நாயின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றார். இதனால் அடிபட்ட நபர் உடலில் ஒரு பகுதி செயலிழக்க, தற்போது தீவிர சிகிச்சை எடுத்து, உடல் நல குறைவிலிருந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு மீண்டு வருகின்றார்.

சாலையில் தெருநாய் இரவில் திடீரென வந்ததைக் கவனிக்கத் தவறியதால், சாலை விபத்து நடந்ததனை அறிந்த ரவிச்சந்திரன் மற்றும் இவரது நண்பர்கள், இனி சாலையில் தெருநாய்கள் - மனிதர்களிடையே விபத்து நடக்காமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிமென திட்டமிட்டனர்.

அதன் அடிப்படையில் இரவு நேரத்தில் உலா வருகின்ற நாய்களை தெரிந்துகொள்ள, நாய்களின் கழுத்தில் மிளிரும் பட்டைகளை கட்ட ஆரம்பித்தனர். தெருநாய்களை அனுகுவது மனிதர்களுக்குக் கடினமான ஒன்று. இதனால் அவைகளுக்குப் பிடித்த பிஸ்கட் உணவை ஊட்டி தன்பால் ஈர்க்கின்றனர். தட்டி கொடுத்து தெரு நாய்களுடன் பழகி, குணத்தை இயல்பாக்குகின்றனர்.

அப்போது கையில் உள்ள ஒளிரும் பட்டைகளைக் கழுத்தில் கட்டிவிடுகின்றனர். 10 நாய்களுக்கு கட்ட முயலும்போது, 2-3 நாய்களுக்குக் கட்ட முடிகின்ற நிலையில், தெரு நாய்கள் சில பெல்டு அணியும் முன் ஓடிவிடுகின்றன. பாதுகாப்புடன் இந்த பணியை செய்யும் இவர்கள், இதுவரை கோவையின் முக்கிய பகுதிகளான சரவணம்பட்டி, கணபதி, டெக்ஸ்டூல் பாலம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ஒளிரும் பெல்டு அணிவித்திருக்கின்றனர்.

ரவிச்சந்திரன் மட்டுமின்றி இவரது நண்பர்கள், இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும், இந்த பணியை செய்து வருகின்றார்கள் . இந்திய அளவில் நடக்கும் விபத்துக்களில் 20% மேற்பட்ட விபத்துக்கள், தெருநாய்கள் மோதலால் நடப்பதாக புள்ளி விவரங்கள் வாயிலாக தெரிகின்றன. எனவே தெரு நாய்களுக்கு ஒளிர்கின்ற பெல்ட் அணிவிக்கும் இவர்களது பணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement