“அதிமுக ஆட்சி அமைக்க ஈகோவை மறந்து ஒன்று சேர வேண்டும்” - ஓபிஎஸ் பேட்டி!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற ஓபிஎஸ் அணியின் வாணியம்பாடி நகர செயலாளர் சீமந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வாழ்த்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம். செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கும் இடையே கருத்துவேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர், “இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.
இருந்தாலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருடன் சிறப்பாக பணியாற்றியவர்” என்றார்.
தொடர்ந்து அமலாக்கத்துறை சொன்ன டாஸ்மாக் முறைகேடு குறித்து அவர் பேசுகையில், “வரி கட்டாமல் மது பாட்டில்களை நேரடியாக டாஸ்மார்க் கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது ஒரு மோசமான செயல்
அமலாக்கத்துறை சோதனையில் 1000 கோடி ரூபாய் முறையீடு நடந்திருப்பதாக செய்திகள் வருகிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது.
தற்போது தான் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பின்னர் யார் தவறு செய்துள்ளார்கள் உங்கள் தகவல் வெளியாகும்.
தொடர்ந்து 2026 தேர்தல் குறித்து அவர் பேசியபோது, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அதிமுக- வை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக கொடுத்துள்ளார்கள். அதே போன்று பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து 2026 ஆம் சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இது நடக்க வேண்டும் என்றால் ஈகோ பிடித்து பிரிந்து கிடக்கும் தலைவர்கள் எல்லாம் ஈகோவை விட்டு ஒன்று சேரவேண்டும்.
எல்லோரும் ஒன்று சேர்ந்து அதிமுக ஆட்சி அமைக்கும்”
இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.