Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TNRains | வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் தகவல்!

10:11 AM Oct 15, 2024 IST | Web Editor
Advertisement

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு நாட்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : #ChennaiRains எதிரொலி | அதிகரித்த காய்கறி விலை… எவ்வளவு தெரியுமா?

இதனால், சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நாளை ( அக்.16ம் தேதி) அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது :

“தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்து அக்.16, 17 ஆகிய தேதிகளில் வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். அதேபோல் அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஓமன் கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்திய பகுதிகளிலிருந்து தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலக உள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Low pressure areaMeteorological CenterNews7Tamilnews7TamilUpdatesRainAlertRainUpdateTNRains
Advertisement
Next Article