ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது #TNPSC!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த வாரம் வெளியிட்ட 2024-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் புதிய தேர்வுக்கான அறிவிப்பு ஒன்று இடம் பெற்றது. அதில், நேர்முகத்தேர்வு கொண்ட தொழில்நுட்ப பணியிடங்களில் 105 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, டிஎன்பிஎஸ்சி நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் அல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்கு அண்மையில் விண்ணப்பப் பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் 105 இடங்களுக்கு நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “விரைவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்” – முதலமைச்சர் #MKStalin நம்பிக்கை!
இந்த தேர்வுக்கு tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இணைய வழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 28-ஆம் தேதி மற்றும் விண்ணப்ப திருத்த மேற்கொள்ள அக்டோபர் 2ம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தேர்வு நடைபெறும் நாள் நவம்பர் 16ம் தேதியாகும். காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.