For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

TNPSC குரூப் 4 தேர்வு - தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

12:29 PM Jun 08, 2024 IST | Web Editor
tnpsc குரூப் 4 தேர்வு   தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
Advertisement

தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ள முக்கிய விதிமுறைகள்;

  • விண்ணப்பதாரர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகைப் புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரிபார்த்தப் பின்னரே, தேர்வர் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் முற்பகல் 9 மணிக்கு வழங்கப்பட்ட பின்னர் விடைத்தாள் நிரப்புவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படும்.
  • 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள்ளேயும், 12.45 மணிக்கு முன்னர் தேர்வு அறையிலிருந்து வெளியேற செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் (ஹால் டிக்கெட்), தங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் (PAN CARD) வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வரவேண்டும்.

  • தேர்வர்கள் ஓஎம்ஆர் (OMR) விடைத்தாளில் தேர்வு தொடங்குவதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் படித்தபின் ஒரு கையொப்பத்தினையும், தேர்வு முடிவடைந்தபின் மற்றொரு கையொப்பத்தினையும் இடவேண்டும்.
  • தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லையெனில், தன்னுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்க வேண்டும்.
  • ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் மற்றும் வினாத்தொகுப்பு ஆகியவற்றை சரிபார்த்து, விண்ணப்பதாரர் வருகைத்தாளில் தனது பெயர், பதிவெண் உள்ளதை உறுதி செய்து, அதில் தன்னுடைய வினாத்தொகுப்பின் எண்ணையும் குறிப்பிட்டு, கையொப்பமிடவேண்டும்.
  • தொலைபேசி, கைக்கடிகாரங்கள், மோதிரங்கள், மின்னணு சாராத பொருள்களான புத்தகங்கள், குறிப்புகள், கைப்பைகள் ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது.
  • ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வுக் கூடத்திற்குள்ளோ, வெளியிளோ விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எவ்வித முறைகேட்டிலும் ஈடுபட்டாலும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
Advertisement