இன்று நடைபெறுகிறது #TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகள்!
2, 327 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு, தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 763 மையங்களில் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்து தேர்வு மொத்தம் 2327 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 7,93,947 பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வு எழுத செல்பவர்களுக்கு சில முக்கியமான அறிவுறுத்தல்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. கண்டிப்பாக இதனை தேர்வர்கள் பின்பற்ற வேண்டும்.
அதாவது இன்று தேர்வு எழுத செல்பவர்கள் மறக்காமல் ஹால் டிக்கெட்டை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இன்று காலை 9:00 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில் கண்டிப்பாக உரிய நேரத்திற்குள் அனைவரும் தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை தாண்டி செல்பவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதன் பிறகு ஹால் டிக்கெட்டில் தேர்வர்களின் புகைப்படம் தெளிவாக அச்சடிக்கப்படவில்லை எனில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
அதனை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி பெயர், முகவரி மற்றும் பதிவு எண் போன்றவற்றை குறிப்பிட்டு ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, நிரந்தர கணக்கு அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். அதன்பிறகு தேவர்கள் முன்கூட்டியே தாங்கள் தேர்வு எழுதும் மையங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது. நீங்கள் தேர்வரைக்குள் செல்லும்போது ஹால் டிக்கெட், ஒரு பிளாக் பாயிண்ட் பேனா, ஏதாவது ஒரு அடையாள ஆவணம் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். அதன் பிறகு சாதாரண கைகடிகாரம் மட்டும்தான் அணிய வேண்டும். மேலும் தேர்வு எழுத செல்பவர்கள் 2 பேனாக்களை உடன் எடுத்துச் செல்வதும் நல்லது தான்.