For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிஎன்பிஎல் கிரிக்கெட்: 3 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி!

07:57 AM Jul 12, 2024 IST | Web Editor
டிஎன்பிஎல் கிரிக்கெட்  3 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி
Advertisement

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றது. 

Advertisement

எட்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் 9-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 19.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சோனு யாதவ் 5 விக்கெட்டைகளை கைப்பற்றினர். சிலம்பரசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இம்மானுவேல், மோகன் பிரசாத், ஹரிஷ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய யாழ் அருண்மொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹரிஷ் குமார் 2 விக்கெட்டை கைப்பற்றினார். பொய்யாமொழி மற்றும் சன்னி சந்து தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Tags :
Advertisement