For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சேலத்தில் இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் போட்டி - சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதல்!

09:24 AM Jul 05, 2024 IST | Web Editor
சேலத்தில் இன்று தொடங்குகிறது tnpl கிரிக்கெட் போட்டி   சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதல்
Advertisement

சேலத்தில் TNPL கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisement

ஐபிஎல் டி20 கிரிக்கெட்டிற்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டி என்பது டி.என்.பி.எல் எனப்படு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடராகும். தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி கிராமஅளவிலும் திறமையான கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து, அவர்களை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்குதை நோக்கமாக கொண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. டி.என்.பி.எல் தொடங்கப்பட்டு இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதேபோல தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகளும் தலா ஒருமுறை வென்றுள்ளன.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஐ.பி.எல்.-ல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பதால் இளம் வீரர்கள்  தங்களது முழு திறமையை வெளிக்காட்டி வருவார்கள். வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் உள்ளிட்டோர் டி.என்.பி.எல்.-ல் அபாரமாக ஆடியதாலேயே ஐ.பி.எல். ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 8-வது டி.என்.பி.எல்.  கிரிக்கெட் போட்டி இன்று சேலத்தில் தொடங்குகிறது. சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்). சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 2-வது தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி மட்டும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும். டி.என்.பி.எல் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி ஆகஸ்டு 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதல்சுற்று ஆட்டங்கள் சேலத்தில் நடக்கிறது. சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும். முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும் போட்டியிடுகின்றன.

சென்னை அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன், ரஞ்சன் பால், பெரியசாமி, ரஹில் ஷா, ஷாஜகான், அபிஷேக் தன்வர். சிலம்பரசன் ஆகியோர் நன்றாக ஆடக்கூடியவர்கள். இதேபோல் கோவை அணிக்கு கேப்டன் ஷாருக்கான், முகிலேஷ், தாமரைக் கண்ணன், சித்தார்த், சுரேஷ்குமார், முகமது உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள். இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும். 3-ல் கோவையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

Tags :
Advertisement