Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேலம் ஸ்பார்டென்ஸை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அபார வெற்றி!

07:59 AM Jul 07, 2024 IST | Web Editor
Advertisement

TNPL கிரிக்கெட் போட்டியில் சேலம் ஸ்பார்டென்ஸை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.

Advertisement

8வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் சேலத்தில் நேற்று  நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

சேலம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் - கவீன் களமிறங்கினர். அதில் அபிஷேக் 20 ரன்களில் வெளியேறினார்.  அடுத்து வந்த பிஸ்ட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களை அடுத்து களமிறங்கிய விஷால் வைத்யா தொடக்க வீரர் கவீனுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கவின் 45 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.  விஷால் வைத்யா 56 ரன்கள் எடுத்தார்.  இறுதியில் சேலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது.  மதுரை அணி தரப்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஹரி நிஷாந்த், சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் களமிறங்கினர். அதில் கேப்டன் நிஷாந்த் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த ஜேகதீசன் கவுசிக் - லோகேஷ்வருடன் ஜோடி சேர்ந்தார்.  அதில் லோகேஷ் 69 ரன்களிலும், கவுசிக் 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  19.3 ஓவர்களில் மதுரை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சேலத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை அபார வெற்றிபெற்றது.

Tags :
#SportsCricketsalem spartansSiechem Madurai PanthersSMP vs SSSS vs SMPTNPL
Advertisement
Next Article