For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிஎன்பிஎல் கிரிக்கெட்:  சேலம் அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!

09:15 AM Jul 19, 2024 IST | Web Editor
டிஎன்பிஎல் கிரிக்கெட்   சேலம் அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
Advertisement

டிஎன்பிஎல் 17வது லீக் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

8 அணிகள் பங்கேற்றுள்ள 8வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.  லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற 17 வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார் 17 ரன்களிலும், ஜெகதீசன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  அவர்களை தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் கேப்டன் பாபா அபராஜித் தவிர 41 ரன்களில் வெளியேறினார்.

இதனையடுத்து, பேட்டிங் செய்த அபிஷேக் தன்வார் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது.  சேலம் தரப்பில் பொய்யாமொழி மற்றும் சன்னி சந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களிமிறங்கிய சேலம் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் 7 ரன்களிலும்,  கவின் 11 ரன்களிலும் வெளியேறினர்.

அடுத்து வந்த ராஜேந்திரன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய முஹம்மது அட்னான் கான் 31 ரன்னிலும், ராபின் பிஸ்ட் 36 ரன்னிலும் வெளியேறினர்.  ஹரிஸ் குமார் 14 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.  இறுதியில் சேலம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags :
Advertisement