#TNMinistry | தமிழ்நாடு அமைச்சரவையில் 4 தலித் அமைச்சர்கள்!
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக கோவி செழியன் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் தலித் அமைச்சர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
ளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராகவும் மற்றும் தற்போதுள்ள இலாகாக்களுடன் கூடுதலாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையை ஒதுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். மேலும் வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருந்தார்.
இந்தப் பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பதவியேற்பு விழா 29.9.2024, ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை ராஜ்பவனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றால் தமிழ்நாடு அமைச்சரவைவில் தலித் அமைச்சர்களின் எண்ணிக்கை நான்காக இருக்கும்.
தமிழ்நாடு அமைச்சரவையில் 4 தலித் அமைச்சர்கள் :
- மதிவேந்தன் (அருந்ததியர்)
- கயல்விழி (தேவந்திர குல வேளாளர்)
- சிவி கணேசன்(ஆதி திராவிடர்)
- கோவி செழியன் (ஆதி திராவிடர்)