Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TNGovt | தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு!

04:56 PM Oct 18, 2024 IST | Web Editor
Advertisement

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு DA என கூறப்படும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதில் இரண்டாம் அகவிலைப்படியான ஜுலை மாதம் உயர்த்த வேண்டியது, பெரும்பாலும் தீபாவளி பண்டிகையை கணக்கில் கொண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாத்ததில் அறிவிக்கப்படும்.

அப்படி காலம் தாழ்த்தி அறிவிக்கப்படும்போது ஜுலை மாதம் முதல் அறிவிப்பு வெளியான மாதம் வரை முன் தேதியிட்டு அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். இது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வழிவகுக்கும்.அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜுலை மாதம் அறிவிக்கப்பட வேண்டிய அகவிலைப்படி நேற்று முன்தினம் (அக்.16) மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, இந்த 3 சதவீத உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவீதமாக அதிகரித்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி, 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, இந்த 3 சதவீத உயர்வால் 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
cm stalinDAMK Stalinnews7 tamiltamil naduTN Govt
Advertisement
Next Article