For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் "தமிழ் புதல்வன்" திட்டம்...முன்னேற்பாடுகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு...

09:18 AM Jul 25, 2024 IST | Web Editor
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ 1 000 வழங்கும்  தமிழ் புதல்வன்  திட்டம்   முன்னேற்பாடுகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு
Advertisement

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு நடத்துதல் மற்றும் நெறிமுறைகள் வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு 1 (Content Assessment-1) வருகின்ற ஆகஸ்ட் 19 முதல் 23 ஆம் தேதி வரை கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பொறுப்புகள்:

பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு 1 (Content Assessment -1) நடத்தி முடித்திட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான பொறுப்புகள்:

தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மேற்காண் வழிகாட்டுதல்களை எடுத்துரைத்து அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் இம்மதிப்பீடு முழுமையாக நடைபெறுவதை உறுதி செய்திடல் வேண்டும். மதிப்பீட்டுத் தேர்வில் கலந்து கொண்ட / கொள்ளாத மாணவர்களின் தகவல்கள், கலந்து கொண்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்கள், தேர்வு முடிந்த ஓரிரு வாரங்களில் மாநில இயக்குநரகத்திலிருந்து மாவட்டங்களுக்கு பகிரப்படும்.

தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியரின் பொறுப்புகள்:

பள்ளிகளில் இம்மதிப்பீடு தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்திட பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். http://locsrv.in:8080 என்ற இணைய தளத்தில் மதிப்பீட்டுக் கருவி தெரிகிறதா என்பதை அனைத்துப் பள்ளிகளும் சரிபார்க்க வேண்டும்.EMIS இல் அனைத்து மாணவர்களின் விவரங்களும் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து மாணவர்களின் விவரங்களும் சரியாகப் பதிவு செய்யப்பட்டவுடன், முன்பு செய்ததைப் போல HM/School உள்நுழைவைப் (credentials) பயன்படுத்தி நிர்வகி பக்கத்திலிருந்து நற்சான்றிதழ்களைப் புதுப்பிக்குமாறு பள்ளிகளுக்குத் தெரிவிக்கவும்

இதையும் படியுங்கள் : 3 தலைமுறையாக அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள் – அரசு நடிவடிக்கை எடுக்க கோரிக்கை!

உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் வழி வினாடி வினா மதிப்பீடுகள்:

  • பள்ளிகளில் அமைந்துள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (HiTech Labs) அனைத்தையும் முதலில் சர்வர் கணினியைக் கொண்டு இணைய வழியில் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு சர்வர் கணினியில் உள்ள இணைய உலாவியைத் (Firefox web browser) திறந்து http://locsrv.in:8080 என்னும் இணைய முகவரியைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு முறை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய செயலாகும். இந்த இணையதளம் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களில் மட்டுமே செயல்படக் கூடியது.
  • சர்வர் கணினியை முறையாகப் பதிவு செய்திருப்பின், அடுத்த முறை http://locsrv.in:8080 என்னும் இணைய முகவரியைத் திறந்தால், நம் பள்ளியின் பெயரும் UDISE எண்ணும் திரையில் தெரியும். இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் தொலைபேசிகளின் வழியாக 14417 என்னும் எண்ணைத் தொடர்பு கொண்டும் குறையைத் தெரிவிக்கலாம்.
  • ஒருமுறையேனும் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தின் சர்வர் கணினியில் தலைமை ஆசிரியரின் EMIS ID அல்லது பள்ளியின் UDISE எண் மற்றும் Password வழியாக உள்நுழைய வேண்டும். அங்கு வலப்பக்கத்தில் உள்ள Manage Update Credentials ល់ 2 Update பட்டனைச் சொடுக்க வேண்டும். இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிகழ்வாகும். இதற்குப் பின் சரவர் கணினியில் நம் EMIS ID ஐ விட்டு வெளியேறலாம்.
  • ஒருமுறையேனும் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தின் சர்வர் கணினியில் ஆசிரியரின் EMIS ID அல்லது பள்ளியின் UDISE எண் மற்றும் Password வழியாக உள்நுழைய வேண்டும். அங்கு வலப்பக்கத்தில் உள்ள Manage பட்டனைச் சொடுக்கி Fetch Events பிரிவில் உள்ள Update பட்டனைச் சொடுக்க வேண்டும். இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிகழ்வாகும். இதற்குப் பின் சரவர் கணினியில் நம் EMIS ID ஐ விட்டு வெளியேறலாம்.
  • வினாடி வினா நடை பெறும் நாளன்று ஆசிரியர் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள சர்வர் கணினியில் உள்ள இணைய உலாவியை (Firefox web browser) திறந்து http://locsrv.in:8080 என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.
  • ஆசிரியர் தன்னுடை ய EMIS ID அல்லது பள்ளியின் UDISE எண் மற்றும் Password ஐப் பயன்படுத்தி அதன் வழியாக உள்நுழைய வேண்டும்.
  • வினாத்தாள்கள் அதற்கான நிகழ்வுகளுடன் திரையில் அவருக்குத் தோன்றும்.
  • ஆசிரியர் நிகழ்வுக்கு எதிரே உள்ள Download QP பட்டனைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்ய வேண்டும். இப்பணியை வினாடி வினா தொடங்கும் நேத்துக்கு முன்பாகவே செய்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு ஆசிரியர் தன் EMIS ID இல் இருந்து வெளியேறி விடலாம்.
  • வினாடி வினா தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே மாணவர்களை உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் உள்ள அனைத்து கணினிகளிலும் அமர வைக்க வேண்டும். மாணவர்கள் இணைய உலாவியைத் (Firefox web browser) திறந்து http://locsrv.in:8080 என்னும் இணை ய முகவரியில் தங்கள் EMIS IDஐப் பயன்படுத்தி உள்நுழைய வே ண்டும்.
  • தற்போது திரையில் தெரிகின்ற வினா நிகழ்வுக்கு எதிரே உள்ள START பட்டனை மாணவர் சொடுக்கி தேர்வைத் தொடங்கலாம். இந்த படிநிலை களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் 14417 என்னும் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
  • மாணவர்கள் மேற்கொள்ளலாம். வினாத்தாளைக் கொண்டு வளரறி மதிப்பீட்டை மேற்கொள்ளலாம்
  •  கடைசி வினாவுக்கு பதிலளித்து Submit பட்டனைச் சொடுக்குவதன் மூலமாக மாணவரால் விடைத்தாளை ஒப்படை க்க முடியும்.
  •  விடை த்தாளை ஒப்படைத்த பிறகு தங்கள் செயல்திறனை மாணவர்கள் திரையில் காண இயலும்.
  • இப்போது மாணவர் தங்கள் EMIS ID இலிருந்து வெளியேறலாம். தன்னுடைய முறை க்காகக் காத்திருக்கும் அடுத்த மாணவர் வினாடி வினா மதிப்பீட்டை மேற்கொள்ளலாம்.
  • வினாடி வினா மதிப்பீட்டை வெற்றிகரமாக அனைத்து மாணவர்களுக்கும் நடத்திய பிறகு, ஓர் ஆசிரியர் சர்வர் கணினியில் ② 2 (Firefox web browser) की http://locsrv.in:8080 என்னும் இணை ய முகவரியில் தன்னுடை ய EMIS ID ஐக் கொண்டு உள்நுழைந்து தன்னுடைய மாணவர்கள் அனைவரின் செயல்திறனையும் குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.
  • இதற்கு முன்பாக தேர்வுக்காக இணைய இணைப்பைத் துண்டித்து வைத்திருந்தால் இப்போது மீண்டும் இணைய இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் .இதன் பிறகு இறுதியாக, ஆசிரியர் தங்கள் EMIS கணக்கில் வலப்பக்கம் உள்ள Manage பட்டனைச் சொடுக்கி Send Responses பிரிவின் கீழ் உள்ள Send பட்டனை அழுத்துவதன் மூலம் தங்கள் மாணவர்களின் செயல்திறனை பிற்காலப் பயனுக்காகச் சே மித்து வைக்க வேண்டும்.
Tags :
Advertisement