Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் மாற்றப்படுகிறரா? யார் இந்த #SatishJarkiholi?

12:51 PM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

முடா முறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை மாற்றக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், சதீஷ் ஜார்கிஹோலிக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

முடா முறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை மாற்றக் கோரி எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் ஒருவரை அடுத்த முதலமைச்சராக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சித்தராமையாவுக்கு அடுத்த இடத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே. சிவக்குமார் இருப்பினும், தாழ்த்தப்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அடுத்த முதலமைச்சர் ஆக்குவதற்கான சாத்தியக்கூறுகளை கட்சியின் தலைமை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக கட்சியின் ஒரு பகுதியினர் குரல் எழுப்புவதாகவும், பொதுப் பணித்துறை அமைச்சராக உள்ள சதீஷ் ஜார்கிஹோலிக்கு மற்றொரு பிரிவினர் ஆதரவளிப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த முதலமைச்சருக்கான போட்டியில் சதீஷ் இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், கடந்த 1ம் தேதி டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அவர், கட்சியின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் சதீஷுடன் ஆட்சி மாற்றம் மற்றும் மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்தராமையாவை மாற்றுவதற்கு கட்சியின் தலைமை முடிவெடுத்தால், அவரின் ஆதரவும் சதீஷுக்கே உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் மற்றொரு தலித் தலைவரான உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், அவருக்கு கார்கே, சதீஷ் உள்ளிட்டோர் ஆதரவளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையும் படியுங்கள் : #Rainalert – உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

யார் இந்த சதீஷ் ஜார்கிஹோலி?

பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் ஜார்கிஹோலி, கர்நாடக அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் யெமகன்மார்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, எச்.டி. குமாரசாமி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராகவும், சித்தராமையாவின் அமைச்சரவையில் சிறு, குறு தொழில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவரது சகோதரர்கள் ரமேஷ் ஜார்கிஹோலி மற்றும் பாலசந்திரா ஜார்கிஹோலி ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளனர். இவரது மகள் பிரியங்கா ஜார்கிஹோலி, மக்களவை உறுப்பினராக உள்ளார்.

Tags :
News7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article