தியாகராஜசுவாமி திருக்கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்!
08:33 AM Dec 30, 2024 IST | Web Editor
Advertisement
உலக பிரசித்தி பெற்ற தியாகராஜசுவாமி திருக்கோவிலில் இசைஞானி இளையராஜா
சாமி தரிசனம் மேற்கொண்டார்.
Advertisement
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக திருவாரூர் வருகை தந்தார். பின்னர் தியாகராஜசுவாமி திருக்கோவிலுக்கு வந்த இசைஞானி இளையராஜாவை அவர்களது ரசிகர்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோவிலின் மைய மண்டபத்தில் உள்ள சாமிக்கு நடைபெற்ற சாயரட்ச்சை பூஜையை நேரில் கண்டு தரிசித்தார். தொடர்ந்து கமலாம்பாள் சன்னதியில் சாமி வழிபாடு செய்த அவர் தில்லை நடராஜரை தரிசனம் செய்வதற்காக சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார்.