For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவண்ணாமலை நிலச்சரிவு | 6 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!

07:51 PM Dec 02, 2024 IST | Web Editor
திருவண்ணாமலை நிலச்சரிவு   6 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு
Advertisement

திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிய 6பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது.

அப்போது நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்ததாகவும், நிலச்சரிவால் 7 பேரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : கனமழை, வெள்ளம் எதிரொலி | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 6 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணியின்போது மண்ணை அகற்றும்போது பொக்லைன் இயந்திரத்தின் முன்பக்க பக்கெட்டில் 2 பேரின் உடல் மீட்கப்பட்டது. எஞ்சிய ஒருவரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement