For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீப திருவிழாவிற்கு தயாராகும் #Tiruvannamalai... அதிகாலை முதலே குவியத் தொடங்கிய பக்தர்கள்!

08:39 AM Dec 13, 2024 IST | Web Editor
தீப திருவிழாவிற்கு தயாராகும்  tiruvannamalai    அதிகாலை முதலே குவியத் தொடங்கிய பக்தர்கள்
Advertisement

திருவண்ணாமலையில் இன்று மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ள நிலையில் இன்று காலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்வான மகா கார்த்திகை தீபத்திருவிழா இன்று (டிச.13) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

இதனை முன்னிட்டு, மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் தீபக்கொப்பரைக்கு நேற்று கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் தீபக்கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தை காண ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், மகா கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (டிச.13) அதிகாலை 3.30 மணியளவில் கோயில் மூலவர் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இந்த கார்த்திகை தீபத் திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 3,408 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னை, விழுப்புரம் மார்க்கமாக 30 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement