விடுமுறை தினத்தையொட்டி #Tiruvannamalai அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
இன்று தினம் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருணாசலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலையில் அமைந்து உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரணக்கனக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். மேலும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள மலையை 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்.
இதையும் படியுங்கள் : கேரளாவில் கணவனுக்கு பின் #chiefsecretary ஆக பதவியேற்ற மனைவி! பினராயி விஜயன் பெருமிதம்!
இந்நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய குவிந்தனர்.
சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக இன்று அதிகாலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலையம்மன் உடனுறை அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.