திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்.!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா இன்று அதிகாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக துவங்கியது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 26ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று அதிகாலை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு= சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை செய்யப்பட்டன.
அதிகாலை 5:45 மணிக்கு 63 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் . இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலையும் மற்றும் மாலையும் சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதி உலா வருவர்.
பின்னர் வரும் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் உள்ள கருவறை முன்பு
பரணி தீபமும் அன்று மாலை கோயிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள
அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் இதை காண 40 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.