Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருத்தணி முருகன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்....

11:10 AM Apr 14, 2024 IST | Web Editor
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை திருவிழா, தமிழ் புத்தாண்டு இன்று
அதிகாலை கொடியேற்றத்துடன் பத்து நாள் நிகழ்ச்சி தொடங்கியது.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சித்திரை
திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் நடைபெறும்.இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்ற நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு இன்று காலை மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து,  மூலவர் முருகப்பெருமானுக்கு அதிகாலை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

சித்திரை திருவிழா பத்து நாள் நிகழ்ச்சியில் உற்சவர் முருகப்பெருமான் காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த பத்து நாட்களில் புலி வாகனம், யானை வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி மயில் வாகனம் போன்ற வாகன சேவைகளில் எழுந்தருளி திருக்கோயில் மாட வீதியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளனர்.

Advertisement
Next Article