திருப்பூர் | 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில், மாணவன் தற்கொலை!
தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் - பிரியா தம்பதியரின் இளைய மகன் பாலகணேஷ்(வயது 16). 11 ஆம் வகுப்பு படித்து வந்த இவர் பொதுத்தேர்வு எழுதி விட்டு தேனிக்கு சென்ற நிலையில், 1 மாதம் கழித்து இன்று(மே.15) திருப்பூர் வந்துள்ளார். வீட்டில் தாய் தந்தை இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்ற நிலையில், பாலகணேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகன் ஊரில் இருந்து வருவதாக கூறிய நிலையில், வந்து விட்டாரா? என பார்க்க தந்தை கண்ணன் வீட்டுக்கு வந்து பார்த்த போது மகன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.