For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் - அனைத்து கோணங்களிலும் விசாரிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் தொடர்பான வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
09:42 PM Aug 03, 2025 IST | Web Editor
திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் தொடர்பான வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம்   அனைத்து கோணங்களிலும் விசாரிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Advertisement

திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து முகிலன் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஒன்றாம் தேதி அந்த மாணவன் காணவில்லை. இதனை தொடர்ந்து, மாணவனின் பெற்றோர் திருப்பத்தூர் நகர போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் காணாமல் போன மாணவன் இன்று பள்ளியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டான். இதனையடுத்து போலீசார் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அம்மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவனின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாணவனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

Advertisement

”திருப்பத்தூர் மாவட்டத்தில்  மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த செல்வன் முகிலன் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன், அப்பள்ளியில் உள்ள கிணற்றில் உடலில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஒன்றாம் தேதி முதல் வகுப்பிற்கு வராத மாணவனை அவரது பெற்றோரும் போலீசாரும் தேடி வந்துள்ள நிலையில், பள்ளியில் மூடியிருந்த கிணற்றில் பள்ளி சீருடையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? மாணவன் தொலைந்து இரண்டு நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அவரைத் தேடாதது ஏன்? இதில் அரசியல் தலையீடுகள் ஏதாவது இருக்கின்றனவா? போன்ற அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும். எவ்வித சமரசமுமின்றி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

மேலும், கடந்த நான்காண்டுகளாக மாணவர்களின் மரணங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், படிக்கும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையையும், பள்ளியில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கிடத் தேவையான நடவடிக்கைகளை
அரசு முன்னெடுக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement