Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ThirupatiLattu | சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் புதிய விசாரணை குழு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

12:03 PM Oct 04, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் மத்திய, மாநில அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் கடந்த ஜூலை மாத ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் அளித்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சிபிஐ கண்காணிப்பில் 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. ஆர். கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது. மேலும், 'அரசியல் விவகாரங்களில் இருந்து கடவுள்களை விலக்கி வைத்திருக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : LaptopScreen-க்குள் எறும்பு… இணையத்தில் வைரல்!

இந்நிலையில், திருப்பதி லட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் தெரிவித்ததாவது:

"திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு விசாரணை குழு உறுப்பினர்கள் மீது எந்தவித அதிருப்தியும் இல்லை. ஆனால் இந்த சிறப்பு குழு விசாரணையை மத்திய விசாரணை அமைப்புகளில் உள்ள ஒரு உயர் அதிகாரி கண்காணிக்கலாம் வேண்டும்"எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கத் தடை இல்லை என்றும் சிபிஐ, காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகியவை இணைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியலை பயன்படுத்துவதை விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ இயக்குநர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாமா ? என அனைத்து தரப்பிடமும் கருத்து கேட்கப்பட்டது. மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இணைந்து 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் அதன் விசாரணையை சிபிஐ இயக்குநர் கண்காணிப்பார் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
News7Tamilnews7TamilUpdatesSpecial Investigation TeamTirupati Lattu
Advertisement
Next Article