Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்!

08:48 AM Mar 29, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

Advertisement

முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான. சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது.

இதனையடுத்து உச்ச நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 6.35 மணியளவில் தொடங்கியது.   சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மலர் மாலைகளாலும்,
வெட்டிவேர் மாலையாலும் அலங்கரிக்கப்பட்டு பட்டாடை உடுத்தி கோயிலில் இருந்து
அழைத்து வரப்பட்டு சன்னதி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய தேரில்
எழுந்தருளி அருள் பாலித்தனர்.  தொடர்ந்து உற்சவர் விநாயகர் எழுந்தருளிய சிறிய
தேரை பெண் பக்தர்கள் இழுத்துச் சென்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

பின்னர் கோயில் சிவாச்சாரியார் கொடியசைத்ததும், மேளதாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.  பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் திருமங்கலம் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.  இவ்விழாவிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.

Tags :
devoteesfestivalmurugan templePanguni TheottamSubramaniya Swamy TempleThiruparangundram
Advertisement
Next Article