For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா : ஆய்வுகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!

05:09 PM Nov 27, 2023 IST | Web Editor
திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா   ஆய்வுகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
Advertisement

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள்
பாதுகாப்பு குறித்து,  மாவட்ட ஆட்சியர் மற்றும் தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

Advertisement

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர்
தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது.  இக்கோயில் ஸ்ரீ சனி பகவானுக்கு தனி சன்னதி என்பதால் மிகவும் பிரசித்தி பெற்றது.  இந்த கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியானது வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி மாலை 05.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப  ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார்.  இந்நிலையில் முன்னேற்பாடுகள் பாதுகாப்பு குறித்து தருமபுரம் ஆதீனம் கட்டளை  ஸ்ரீல ஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பாதுகாப்பு அம்சங்கள், பக்தர்கள் செல்லும் வழி உள்ளிட்டவைகள் குறித்து கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து  செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பேசியதாவது:

சனிப்பெயர்ச்சி விழா அன்று 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும், இலவச மற்றும் கட்டண தரிசனங்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம் செய்ய உள்ளதாகவும்,  தரிசன கட்டணம் 300, 600, 1000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

Tags :
Advertisement