#TirumalaBrahmotsavam - ஏழுமலையான் சிம்ம வாகன புறப்பாடு கோலாகலம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான இன்று, ஏழுமலையானின் சிம்ம வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் (அக். 4) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று, காலை 8 மணிக்கு கோயில் மாட வீதிகளில் ஏழுமலையானின் சிம்ம வாகன புறப்பாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது.
கோயிலில் இருந்து பல்லக்கில் எழுந்தருளி வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி அங்கு தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நடைபெற்ற தூப, தீப, சமர்ப்பணம் ஆகியவற்றுக்கு பின் கோயில் மாடவீதிகளில் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே, ஏழுமலையானின் சிம்ம வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை முத்யபு வாகனசேவை நடைபெறும்.
மாட வீதிகளின் இருபுறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஏழுமலையானின் கோஷங்கள் முழங்க சிம்ம வாகன புறப்பாட்டை கண்டு வழிபட்டனர்.