#Tiruvannamalai | கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருக்கார்த்திகை தீபத் திருவிழா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் கோயில் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்படும். இதனை முன்னிட்டு இன்று காலை 6.20 மணியளவில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்படடது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினந்தோறும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் வெள்ளி அதிகார அம்ச வாகனங்களில் எழுந்தருலி பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். கார்த்திகை தீப திருவிழாவில் முக்கிய திருவிழாவான பஞ்ச மூர்த்திகள் மகாராதம் வரும் 10 ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் நடைபெறுகிறிது.
அன்றைய தினம் பஞ்சமூர்த்திகள் மகாரதங்களில் மாட வீதியில் வலம் வந்து காட்சியளிப்பர். வரும் 13ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். விழாவின் இறுதியாக 15ம் தேதி இரவு 9 மணியளவில் தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவம் நடைபெறும்.