Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Tiruchirappalli-ல் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம் | பஞ்சப்பூரில் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

04:44 PM Sep 20, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சிராப்பள்ளி அருகே பஞ்சப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரண்டப்பள்ளியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது சில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மொரணப்பள்ளி கிராமத்தில், ஓசூர் மாநகராட்சியால் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை (நிலை) எண். 173, நாள் 08.12.2022-ல் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது.

தரைத்தளம் வரையிலான கட்டுமானத்திற்கான இந்த அனுமதியின் அடிப்படையில் பணிகள் தற்போது முன்னேற்றத்தில் உள்ளன. பெங்களூரு நகரத்திற்கு அருகிலான அமைவிடம் உள்ளிட்ட காரணங்களால் இப்புதிய பேருந்து நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளின் போக்குவரத்து எதிர்பார்க்கப்படுவதால், கட்டப்பட்டு வரும் இப்புதிய பேருந்து நிலையத்தில் தேவைப்படும் கூடுதல் வசதிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.18.20 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்.

இதன்படி, கட்டப்பட்டு வரும் இப்புதிய பேருந்து நிலையத்தின் முழு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் வசதி, கீழ்நிலை தண்ணீர் தொட்டி, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வசதி உள்ளிட்ட கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஓசூர் மாநகர மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஓசூர் மாநகர் வழியாக பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் பயணம் மேற்கொள்ளும் அதிகளவிலான பொதுமக்களுக்கும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் வசதிகளுடன் அமையவுள்ள இப்புதிய பேருந்து நிலையம் பெரும் பயனளிக்கும்.

இதேபோல திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் தனியார் சொகுசு பேருந்து நிலையம் (Omni Bus Stand) சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இப்பேருந்து நிலையம், சுமார் 30,849 சதுரடி பரப்பளவிலான இரண்டு பேருந்து நடைமேடைகளுடன் 82 பேருந்துகளை கையாளும் வசதியுடன் 37 எண்ணிக்கையிலான இயக்கப்படும் பேருந்து நிறுத்த தடங்களுடன் மற்றும் 45 எண்ணிக்கையிலான காத்திருப்பு பேருந்து நிறுத்த தடங்களுடன் மொத்தம் 1,42,945 சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மூலதன மானிய நிதி - இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதியின் கீழ் ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்.

Tags :
PanjapurTrichyTrichy Panjapur
Advertisement
Next Article