திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்... அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4 மணியளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது-
பின்னர் அதிகாலை 5 மணியளவில் திருப்பள்ளி எழுச்சியும், காலை 7.30 மணியளவில் உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 மணியளவில் உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மார்கழி பூஜைகளை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, மாலை 3 மணியளவில் சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணியளவில் ராக்கால அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. அதிகாலையிலேயே கடலில் புனித நீராடிய முருக பக்தர்களும், ஐயப்ப பக்தர்களும் சுவாமி
தரிசனம் செய்தனர்.