கந்த சஷ்டி திருவிழா | 3-ஆம் நாள் யாகசாலை பூஜை - #Thiruchendur -ல் குவியும் பக்தர்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) கோலகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா நேற்று முன் தினம் (நவ.2) காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கோலகலமாக தொடங்கியது. இதனையடுத்து, தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து நேற்று முதல் விரதம் இருக்க துவங்கினர்.
தொடர்ந்து, 7 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 3ம் நாளான இன்று அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், நடைபெற்ற யாகசலையில் பூர்ணாகுதி நடைபெற்று தீபராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர்க்கு பால் பழம் பன்னீர்,
தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : Accident | ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த மாணவி… அடுத்து நடந்தது என்ன?
இதில் விரதம் இருக்கக்கூடிய ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7-ந் தேதி
நடைபெறுகிறது. இதையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.
பக்தர்களின் வசதிக்காக நமது நியூஸ்7 தமிழ் சார்பில் கோயில் பிரகாரங்களில் பெரிய அகன்ற திரைகள் வைக்கப்பட்டு திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் நியூஸ்7 தமிழ் பக்தி யூடியூப் சேனலிலும், நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.