For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா... சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
09:22 PM Jul 03, 2025 IST | Web Editor
திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
திருச்செந்தூர் குடமுழுக்கு விழா    சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
Advertisement

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அதன்படி, இக்கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

Advertisement

இதனை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, வருகின்ற ஜூலை 6ம் தேதி இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி வழியாக செங்கோட்டையை வந்தடையும். அதேபோல், மறுமார்க்கமாக ஜூலை 7-ம் தேதிஇரவு 7:45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்னதாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 7ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயிலானது 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் ரயிலானது திருநெல்வேலிக்கு மதியம் 12.55 மணிக்கு வந்தடையும்.

Tags :
Advertisement