திருச்செந்தூர்: கோலாகலமாகத் தொடங்கிய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா!!
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாவில் நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. காலை 7 மணி அளவில் யாகசாலை பூஜைகளுடன் திருவிழா தொடங்கியது. தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடி, பச்சை நிற உடை அணிந்து தங்கள் விரதத்தை துவங்கினர்.
மேலும், விரதம் இருக்ககூடிய பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் 30 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.