For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிப்பர் லாரி மோதி விபத்து - 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி பலி!

ராமநத்தம் அருகே சாலையில் சென்ற செம்மறி ஆடுகள் மீது டிப்பர் லாரி மோதியதில் 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி பலி.
10:37 AM Feb 20, 2025 IST | Web Editor
டிப்பர் லாரி மோதி விபத்து   30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி பலி
Advertisement

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த சித்தூரில் வசித்து வருபவர் பரமக்குடியை சேர்ந்த முருகேசன். இவர் 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை இப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் நேற்று அதிகாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு சாலை வழியாக ஓட்டி சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஆடுகள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உடல் நசுங்கி பலியானது.

மேலும் 20க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராமநத்தம் போலீசார், லாரி ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement