Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்க அவகாசம் நீட்டிப்பு! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

09:53 PM Jun 13, 2024 IST | Web Editor
Advertisement

வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான அவகசத்தை நீட்டித்து தமிழ்நாடு போக்குவரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் நாளை முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் கொடுத்திருந்தனர்.  இந்நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கான கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர்.

இதையும் படியுங்கள் : இந்திய பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர்களுக்கு அழைப்பு! GNI இந்திய மொழிகள் திட்டம் 2024க்கு ஜூன் 17, 2024 வரை விண்ணப்பிக்கலாம்!

இதனைத் தொடர்ந்து தற்போது வரும் திங்கட்கிழமை (ஜூன் -17) வரை அதற்கான அனுமதி வழங்கி இருக்கிறார்கள். எனவே, போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வார விடுமுறை, பக்ரீத் பண்டிகையையொட்டி வெளிமாநில பேருந்துகளை இயக்குவதற்கான அவகாசம் நீட்டிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திங்கட்கிழமைக்கு பிறகு வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கினால் போக்குவரத்து துறையினுடைய விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Extendnotificationomni busestamil nadutransport department
Advertisement
Next Article