Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிறு, குறு தொழிலாளர்களுக்கும் மின்கட்டணம் செலுத்த அவகாசம் - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

07:00 PM Dec 09, 2023 IST | Web Editor
Advertisement

மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிக்கையில்,

“மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, கடந்த டிச. 6-ம் தேதியன்று வெளியிடப்பட்ட அறிவிப்பான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மின் உபயோகிப்பார்களின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிச. 4 முதல் 07.12.2023 வரை இருந்த மின் நுகர்வோர்களுக்கு அபராத தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்பானது முதல்வரின் ஆணையின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Chennai Floods 2023Chennai rainsMichaung CycloneNews7Tamilnews7TamilUpdatesThangam ThenarasuTN Govt
Advertisement
Next Article