ஒரே வாரத்தில் ரூ.217.9 கோடி வசூல் செய்த ''டைகர் 3'' - லேட்டஸ்ட் அப்டேட்!
சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான டைகர் 3 திரைப்படம் முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் ₹ 217.9 கோடி வசூலித்துள்ளது.
பாலிவுட்டில் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று டைகர் 3. நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவான இந்த படம் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்பை த்ரில்லர் யுனிவர்ஸ் படங்களில் ஒன்றான ’டைகர் 3’ தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
டைகர் 3 ஏக் தா டைகர் (2012) மற்றும் டைகர் ஜிந்தா ஹை (2017) ஆகியவற்றின் தொடர்ச்சியாகும். இதில் கத்ரீனா, சல்மான் கானின் சூப்பர் உளவாளி அவினாஷ் சிங் ரத்தோருடன் இணைந்து முன்னாள் ஐஎஸ்ஐ ஏஜென்ட் ஜோயாவாகத் திரும்புகிறார். மனீஷ் ஷர்மா-இயக்குநர் யாஷ் ராஜ் பிலிம்ஸின் உளவுப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது பதான் நிகழ்வுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஷாருக்கான் பதான் ஆகவும், ஹிருத்திக் ரோஷன் வார் ஃப்ரம் கபீராகவும் நடித்துள்ளனர். அதே நேரத்தில் இம்ரான் ஹாஷ்மி முன்னணி எதிரியாக உரிமையாளருடன் இணைகிறார்.
இந்த படத்தை மனீஷ் சர்மா இயக்கியுள்ள நிலையில் யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து படைக்கும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அதுபோலவே, இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை திரையிடப்பட்ட டைகர் 3 ஒரு வாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 300 கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை 44.5 கோடி வசூலித்த நிலையில், மறுநாளான திங்கட்கிழமை அன்று 59.25 கோடி ரூபாய் வசூல் செய்தது. அடுத்தடுத்த நாட்களில் அது குறைந்து, வெள்ளியன்று குறைந்த ஒரு நாள் வசூலான ₹ 13.25 கோடியைப் பெற்றது. இந்நிலையில், ஏழாம் நாளான நேற்று முதல் வார வசூலாக 217. 9 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.