Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் கொள்ளை - திருவள்ளூரில் அதிர்ச்சி!

09:42 AM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளில் இருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

செங்குன்றம் பகுதியில் இருந்து சென்ற சென்னை மாநகரப் பேருந்தை (தடம் எண் 505)
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு,  அப்பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் அறைக்கு நேரத்தை பதிவு செய்ய சென்றனர். நேரத்தை பதிவு செய்துவிட்டு வந்து பார்த்தபோது, பேருந்தின் ஓட்டுநர் இருக்கையின் அருகே பையில் வைக்கப்பட்டிருந்த ரூ.12, ரூ.15, ரூ.41 ரூபாய் அடங்கிய 31 டிக்கெட் கட்டுக்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதேபோல் அந்த பேருந்தின் அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு அரசு மாநகர பேருந்தில் இருந்தும் டிக்கெட் பண்டல்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. அந்த இரண்டு பேருந்துகளில் இருந்தும் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இதனால் பதறிப்போன ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் நேர காப்பாளருக்கு தகவல் அளித்துவிட்டு, திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இச்சம்வத்தால் இரண்டு பேருந்துகளும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.  பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைப்பட்டிருந்த பேருந்தில் இருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Bus TicketsCrimeinvestigationPoliceTiruvallur
Advertisement
Next Article