For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை விழா ஜன.26-இல் தொடக்கம்!

01:31 PM Dec 14, 2023 IST | Web Editor
திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை விழா ஜன 26 இல் தொடக்கம்
Advertisement

திருவையாற்றில் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-ஆவது தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா ஜனவரி 26 ஆம் தேதி தொடங்க உள்ளது.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-ஆவது ஆராதனை விழா ஜனவரி 26-ஆம் தேதி தொடங்குவதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரமம் வளாகத்தில் பந்தல் கால் நடும் விழா இன்று நடைபெற்றது.

இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரமம் வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைதொடர்ந்து ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் எஸ்.சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் பந்தல் காலை நட்டு வைத்தனர்.

இதையும் படியுங்கள் : சென்னையில் இன்று முதல் 21-வது சர்வதேச திரைப்பட விழா!

திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 177 ஆவது ஆராதனை விழாவுக்காக வியாழக்கிழமை காலை பந்தல் காலை நட்டு வைத்த ஸ்ரீ தியாகபிரம்மம மகோற்சவ சபா அறங்காவலர் எஸ். சுரேஷ் மூப்பனார்.

அதை தொடர்ந்து, பந்தல் கால் நடும் விழாவில் சபா அறங்காவலர்கள் சி.மிதுன் மூப்பனார், எம்.ஆர்.பஞ்சநதம், டெக்கான் என்.கே.மூர்த்தி, என்.ஆர். நடராஜன், உதவிச் செயலர் டி.ஆர். கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சுரேஷ் மூப்பனார் கூறியதாவது;  "திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 177-ஆவது ஆராதனை மகோத்சவ விழா ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளாகிய ஜனவரி 30-ஆம் தேதி ஆராதனை விழா நடைபெறுகிறது.

இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். இந்த விழாவில் தேசிய நிகழ்ச்சியாக ஜனவரி 27-ஆம் தேதி இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை அகில இந்திய வானொலியில் நேரலையாக ஒலிபரப்பப்படும்.

ஜனவரி 26 -ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் சபா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர்" என சுரேஷ் மூப்பனார் தெரிவித்தார்.

Tags :
Advertisement