Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு!

10:11 AM Jan 02, 2024 IST | Web Editor
Advertisement

மணிப்பூரின் தெளபல் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து  கோரி வரும் நிலையில், இதற்கு சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இருதரப்பினருக்கும் நில உரிமை பிரச்னைகளும் உள்ளன. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், மணிப்பூர் மாநிலம் கடந்த ஏப்ரல் மாதம் மாதம் முதல் பற்றி எரிந்தது. லட்சக்கணக்கான குகி இனத்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மே மாதம், குகி இனத்தைச் சேர்ந்த பெண்களை நிர்வாணமாக ஒரு கும்பல் ஊர்வலமாக அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள் : 5.33 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை - மத்திய அரசு தகவல்

இந்நிலையில், தௌபல் மாவட்டம் லிலோங் சிங்ஜாவ் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் மூவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலை தொடர்ந்து, அங்குள்ள மக்கள் ஆத்திரமடைந்து 3 கார்களுக்கு தீ வைத்தனர்.

இந்த வன்முறை காரணமாக மைதேயிகள் அதிகமாக வசிக்கும் பள்ளத்தாக்கு மாவட்டங்களான தௌபல், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங், விஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

Tags :
gunfireLockdownManipurThelabal
Advertisement
Next Article