For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மறுவெளியீடு செய்யப்பட்ட நாளில் இருந்து மாஸ் காட்டும் #Thumbbad திரைப்படம் - வசூல் குறித்த அப்டேட்!

05:55 PM Sep 23, 2024 IST | Web Editor
மறுவெளியீடு செய்யப்பட்ட நாளில் இருந்து மாஸ் காட்டும்  thumbbad திரைப்படம்   வசூல் குறித்த அப்டேட்
Advertisement

மறுவெளியீட்டில் மாஸ் காட்டும் தும்பாட் திரைப்படம். வெளியான 10 நாட்களில் செய்த வசூல் சாதனை குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

பாலிவுட் பார்த்திடாத ஃபேன்டஸி ஹாரர் திரைப்படம் என விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட திரைப்படம் தும்பாட். இப்படம் இன்று வரை ‘அண்டர்ரேட்டட்’ ஆக இருந்து வருகிறது. சிறுவயதில் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் கதை ‘பேராசை பெருநஷ்டம்’ என்கிற நீதிமொழியை அடிப்படையாக கொண்ட தங்க முட்டையிடும் வாத்து பற்றிதான். அந்த நீதிமொழியை மையப்படுத்தி ஹாரர் ஃபேன்டஸி படமாக இதை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குநர் ரஹி அணில் பர்வே.

இந்தத் திரைப்படத்தில் வரும் இந்தப் புராணக் கதையை இயக்குநர் ரஹி அணில் பர்வே 1992-ம் ஆண்டு தனது நண்பர் மூலமாக அறிந்துகொண்டு, மராத்தி எழுத்தாளர் நாராயண் தரப் ‘தும்பட்’ கிராமத்தைப் பற்றி எழுதிய கதைதான் அது. இந்த ஃபேன்டஸியான மர்மக் கதை அவரைத் திகிலூட்டியதைத் தொடர்ந்து திரைக்கதைக்கான வடிவில் இதை மாற்றலாம் என முயற்சி 1997-லிலேயே முதல் பிரதி எழுதும்போதே திரைப்படமாக இதைத் தயார் செய்துவிட்டாராம். ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்யும் போது இயக்குநருக்கு 18 வயதுதானாம்.

இதையடுத்து 2010-ம் ஆண்டிற்குள் இத்திரைப்படத்திற்கான ஸ்டோரிபோர்ட் பணிகளையும் முடித்திருக்கிறார். ‘தும்பட்’ முழு படத்தின் ஸ்டோரி போர்ட்டையும் 700 பக்கங்களுக்குத் தயார் செய்திருக்கிறார். பிறகு 2012-ல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தைத் தயாரித்து நடித்த சோகும் ஷாவுக்கு ‘தும்பட்’ கிராமத்தைப் பற்றிய கதை அதிகளவில் பிடித்துவிட்டதாம். “இது போன்ற கதையை இதற்கு முன் இந்திய சினிமாவில் பார்த்ததில்லை” எனக் கூறி முழு ஈடுபாட்டுடன் இத்திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு 6 ஆண்டுகள் வரை நீண்டிருக்கிறது. பிறகு 2015-ல் படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மட்டும் இரண்டரை ஆண்டுகள் வரை நீடித்துச் சென்றிருக்கின்றன. முழுமையான ஈடுபாடும் பொறுமையும்தான் இயக்குநர் ரஹி அணில் பர்வே தான் சிறுவயதில் கேட்ட கதை அசல் உருவம் பெறுவதற்கு முக்கியக் காரணம். குறைந்த பட்ஜெட்டை வைத்து, வி.எஃப்.எக்ஸ், எஸ்.எஃப்.எக்ஸ் ஷாட்களிலும் நல்லதொரு அவுட்புட்டைத் தொழில்நுட்ப ரீதியாகக் கொண்டு வந்திருப்பார்கள். நேர்மறையான விமர்சனங்களையும் வசூல் ரீதியாக லாபத்தையும் ஈட்டித் தந்தாலும் இப்போது வரை இத்திரைப்படம் ‘அண்டர்ரேட்டட்’ தான்.

இத்திரைப்படத்தை புதிய தொழில்நுட்பத்துடன் கடந்த செப். 13-ம் தேதி வெளியானது. இதனை திரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தை மறுவெளியீடு செய்த கலர் எல்லோ ப்ரொடெக்‌ஷன்ஸ் படத்தின் வசூல் குறித்து அறிவித்துள்ளது. அதன்படி, மறு வெளியீடு செய்யப்பட்ட 10 நாட்களில் ரூ.21.57 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/cypplOfficial/status/1838171164742475788

மறுவெளியீடு செய்யப்பட்டதில் தமிழில் ‘கில்லி’ திரைப்படம் மட்டுமே ரூ.20 கோடி வசூலை தாண்டியதாகவும், ரூ.25 கோடி வசூலை அள்ளியதாகவும், தொடர்ந்து தும்பாட் மட்டுமே இந்த வசூலை மிஞ்சும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. திரையரங்கில் இத்திரைப்படத்தை காணமுடியவில்லை என்ற பல்வேறு ரசிகர்களின் துயரங்களை போக்க மறு வெளியீடு செய்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags :
Advertisement